முன்னிருப்பை அமைக்கும் கட்டகத்திலுள்ள நிரலியின் முன்னிருப்பு அமைவுகளை உதவி மேற்கோளிடுகிறது. நிறங்கள், சுட்டெலியின் செயல்கள், அல்லது மற்ற அமைவாக்கக்கூடிய உருப்படிகள் போன்றவை உங்களின் நிரலிக்குக் கட்டகத்திற்கு ஏற்ப வெவ்வேறாக இருக்க முடியும்.

LibreOffice உதவிக் கட்டகம் தகவலை எளிதாக அணுகவும் ஆதரவும் வழங்குகிறது. உதவிச் சூழல் இல் உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிய சில வழிகள் உள்ளன: நீங்கள் ஒரு குறிப்பிட்ட திறவுச்சொல்லை அகவரிசை இல் தேடலாம், கண்டறி இன் கீழ் ஒரு முழு- உரையைத் தேடலாம், அல்லது தலைப்புகள் ஐப் படிநிலைமுறை பட்டியலின் வழி பார்க்கலாம்.